Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், ஜோ பைடன் பெற்ற வாக்குகள் குறித்த தகவல்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், ஜோ பைடன் பெற்ற வாக்குகள் குறித்த தகவல்கள்

By: Karunakaran Wed, 04 Nov 2020 1:44:35 PM

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், ஜோ பைடன் பெற்ற வாக்குகள் குறித்த தகவல்கள்

சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிரம்ப், ஜோ பைடன் ஆகியோர் பெற்ற வாக்குகள் மற்றும் பிரதிநிதிகளின் ஆதரவு குறித்த தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. அமெரிக்க பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளில் அதிபரை தேர்ந்தெடுக்க 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை.

இந்திய நேரப்படி இன்று காலை நிலவரப்படி ஜோ பைடன் 129 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். டிரம்ப் 108 வாக்குகளுடன் சற்று பின்தங்கியிருந்தார். அதன்பிறகும் பெரும்பாலான மாநிலங்களில் ஜோ பைடன் கை ஓங்கியது. 10.30 மணி நிலவரப்படி ஜோ பைடன் 223 வாக்குகளும், டிரம்ப் 166 வாக்குகளும் பெற்றிருந்தனர். ஆனால் பிரதிநிதிகள் அதிகம் உள்ள முக்கியமான மாநிலங்களில் டிரம்ப் முன்னிலை பெற்றிருந்தார்.

votes,trump,joe biden,us presidential election ,வாக்குகள், டிரம்ப், ஜோ பிடன், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்

காலை நிலவரப்படி டிரம்ப் வெற்றி பெற்ற மாநிலங்கள்: அலாஸ்கா, அர்கன்சாஸ், கான்சாஸ், கென்டக்கி, லூயிசியானா, மிசிசிப்பி, நெப்ராஸ்கா, வடக்கு டகோட்டா, ஓக்லஹாமா, தெற்கு டகோட்டா, டென்னிசி, மேற்கு விர்ஜினியா, வியோமிங், இண்டியானா, தெற்கு கரோலினா, உட்டா.

ஜோ பைடன் வென்ற மாநிலங்கள்: கொலராடோ, கொலம்பியா, கனெக்டிகட், டெலாவர், இல்லினாய்ஸ், மேரிலேண்ட், மாசாசூசெட்ஸ், நியூ ஹாம்ஷயர், நியூ ஜெர்சி, நியூ மெக்சிகோ, நியூ யார்க், ரோட் தீவு, வெர்மான்ட், விர்ஜினியா, வாஷிங்டன், ஓரேகான், கலிபோர்னியா,

டெக்சாஸ் மாநிலத்தில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே சிறிய அளவிலேயே வித்தியாசம் இருந்தது. இரு கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களிக்கும் மக்கள் அதிகம் கொண்ட மாநிலங்களில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. புளோரிடா, வட கரோலினா, ஜார்ஜியா, டெக்சாஸ் மற்றும் அரிசோனா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவு இரு போட்டியாளர்களுக்கும் முக்கியமானதாகும்.

Tags :
|
|