Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பன்றிக்காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என தகவல்

பன்றிக்காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என தகவல்

By: Nagaraj Sun, 02 Apr 2023 2:53:58 PM

பன்றிக்காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என தகவல்

நாமக்கல்: பன்றிக்காய்ச்சல் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு மட்டுமே பரவும். மற்ற விலங்குகள் அல்லது மனிதர்களுக்கு தொற்று இல்லை. எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கல்லங்குளத்தில் ராஜாமணி என்பவருக்கு சொந்தமான பன்றி பண்ணை உள்ளது. அங்கு கடந்த 9ம் தேதி 2 பன்றிகள் திடீரென இறந்தன. பின்னர், பன்றிகளை நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி தொற்றுநோயியல் துறைக்கு அனுப்பி வைத்து அங்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

அவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சென்னை மத்திய கால்நடை மருத்துவக்கல்லூரி பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பண்ணையை சுற்றியுள்ள பகுதிகளில் நோய் பரவல் மற்றும் அதன் தன்மை குறித்து தீவிரமாக கண்காணித்தனர்.

district collector,fear,fever,name stone,pig,public, ,அச்சம், காய்ச்சல், நாமக்கல், பன்றி, பொதுமக்கள், மாவட்ட கலெக்டர்

மேலும், சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவை இயக்குனருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. பின்னர், இயக்குநரின் உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் 18 பன்றிக்குட்டிகள் மனிதாபிமானத்துடன் அழிக்கப்பட்டன. பன்றிக்குட்டிகள் உயிரியல் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் ஆழமான குழி தோண்டி புதைக்கப்பட்டன.

மேலும் இந்த பண்ணை கால்நடை பராமரிப்பு துறையால் இன்னும் ஒரு வருடத்திற்கு கண்காணிக்கப்படும். இந்த வகை பன்றிக்காய்ச்சல் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு மட்டுமே பரவும். மற்ற விலங்குகள் அல்லது மனிதர்களுக்கு தொற்று இல்லை. எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags :
|
|
|
|