Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாம்பரத்திலிருந்து ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் இயங்கும் என்று தகவல்

தாம்பரத்திலிருந்து ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் இயங்கும் என்று தகவல்

By: Nagaraj Sun, 29 Oct 2023 2:22:21 PM

தாம்பரத்திலிருந்து ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் இயங்கும் என்று தகவல்

சென்னை: ரயில் இயக்கம்... சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் ராக்போா்ட், மங்களூரு விரைவு ரயில்கள் நவ.1 முதல் நவ.3-ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூரிலிருந்து இரவு 11 மணிக்கு மேல் புறப்படும் ரயில்கள் நவ.1, 2, 3 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படுவதாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயில்வே நிா்வாகம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

passenger,reservation,southern railway,official,train operation ,பயணிகள், முன்பதிவு, தெற்கு ரயில்வே, அதிகாரப்பூர்வம், ரயில் இயக்கம்

அதன்படி, எழும்பூரிலிருந்து மங்களூருக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மங்களூரு விரைவு ரயில் (எண்: 16159), திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு புறப்படும் ராக்போா்ட் அதிவிரைவு ரயில் (எண்: 12653) ஆகியவை மேற்கண்ட நாள்களில் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

Tags :