Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய வகை கொரோனா உலகம் முழுவதும் பரவியிருக்கலாம் என தகவல்

புதிய வகை கொரோனா உலகம் முழுவதும் பரவியிருக்கலாம் என தகவல்

By: Nagaraj Tue, 22 Dec 2020 09:44:31 AM

புதிய வகை கொரோனா உலகம் முழுவதும் பரவியிருக்கலாம் என தகவல்

உலகம் முழுவதும் பரவியிருக்கலாம்... லண்டனில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில் அது ஏற்கனவே உலகம் முழுவதும் பரவியிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு கிட்டத்தட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தியில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லண்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

new type of corona,worldwide,recent studies ,புதிய வகை கொரோனா, உலகம், முழுவதும், சமீபத்திய ஆய்வுகள்

தொடர்ந்து இத்தாலிக்கு இங்கிலாந்தில் இருந்து சென்ற இருவருக்கும் இந்த வைரஸ் உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் லண்டனை தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் இந்த புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் 'புதிய கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவி வருவதை சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதனால் ஏற்கனவே உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவியிருக்கலாம்.' என்று கூறியுள்ளார்.

Tags :