Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தகவல்

உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தகவல்

By: Nagaraj Sat, 11 Mar 2023 11:48:04 PM

உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தகவல்

நியூயார்க்: ஆஸ்கர் விருது விழாவில் தொடக்க உரையை நிகழ்த்த உக்ரைனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த யுத்தம் ஆரம்பமாகி ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், யுத்தம் இன்னும் தீவிரமடைந்து வருகின்றது.

oscar,president,zelansky , உக்ரைன், ஜெலென்ஸ்கி, தொடக்க உரை

தற்போது, உக்ரைன் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளால் ஆயுதம் மற்றும் நிதியுதவியுடன் ரஷ்யாவிற்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நாளை 12ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் திரையுலக கலைஞர்கள் மற்றும் இசை கலைஞர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். விழாவின் போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி துவக்க உரை நிகழ்த்த கோரிக்கை விடுத்தார். ஆனால், இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுளதாகக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
|