Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் ஏழை மாணவிகளுக்கு ஸ்டெம் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு

இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் ஏழை மாணவிகளுக்கு ஸ்டெம் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு

By: Nagaraj Thu, 17 Aug 2023 11:33:29 PM

இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் ஏழை மாணவிகளுக்கு ஸ்டெம் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு

புதுதில்லி: ரூ.100 கோடி ஒதுக்கீடு... இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனமான இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் ஏழை மாணவிகளுக்கு ஸ்டெம் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடங்க ரூ.100 கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, புகழ்பெற்ற கல்லூரிகளிலிருந்து ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளில் ஏதேனும் ஒன்றில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் 2,000 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நாடு முழுவதும் நான்கு ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

'ஸ்டெம் ஸ்டார்ஸ்' ஸ்காலர்ஷிப், ஸ்டெம் படிப்பு காலத்திற்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை கல்விக் கட்டணம், வாழ்க்கை செலவுகள் மற்றும் படிப்பு பொருட்களை ஈடுசெய்ய உதவும் என்று இன்போசிஸ் அறக்கட்டளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

report,scholarship,academic environment,female students ,அறிக்கை, உதவித்தொகை, கல்விச்சூழல், மாணவிகள்

இன்ஃபோசிஸ் அறக்கட்டளை அறங்காவலர் சுமித் விர்மானி இதுபற்றி கூறுகையில், இந்தியாவில் நிலவும் வறுமையால் பல இளைஞர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகின்ற நிலையில் பெண்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். அதனால்தான், 'ஸ்டெம் ஸ்டார்ஸ்' ஸ்காலர்ஷிப் திட்டம் ஆர்வமுள்ள மாணவிகளுக்கு ஒரு முழுமையான கல்வி சூழலை வழங்க முயல்கிறது என்றார்.

இந்நிலையில், அதன் தொடக்க ஆண்டில், இந்த உதவித்தொகையானது ஐ.ஐ.டி, பிட்ஸ்-பிலானி, என்.ஐ.டி. மற்றும் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளை உள்ளடக்கிய என்.ஐ.ஆர்.எஃப் (தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு) அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களை உள்ளடக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|