Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை தொடக்கம்

கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை தொடக்கம்

By: Nagaraj Tue, 14 July 2020 10:54:45 AM

கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை தொடக்கம்

ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கும் சோதனை தொடங்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை 205க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவி உள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

corona,vaccine,volunteers,scientists ,கொரோனா, தடுப்பு மருந்து, தன்னார்வலர்கள், விஞ்ஞானிகள்

இதற்கான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் பல்வேறு நாடுகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. அந்த வகையில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்து தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

நான்கு வார இடைவெளியில் இரண்டு முறை தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு அதன் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பரிசோதனையின் முடிவுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|