Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஞ்சிபுரத்தின் வரலாற்று பாரம்பரிய சின்னங்களை புதுப்பித்து பாதுகாக்கும் பணி துவக்கம்

காஞ்சிபுரத்தின் வரலாற்று பாரம்பரிய சின்னங்களை புதுப்பித்து பாதுகாக்கும் பணி துவக்கம்

By: Nagaraj Thu, 22 June 2023 11:53:58 PM

காஞ்சிபுரத்தின் வரலாற்று பாரம்பரிய சின்னங்களை புதுப்பித்து பாதுகாக்கும் பணி துவக்கம்

சென்னை: காஞ்சிபுரத்தின் வரலாற்று பாரம்பரிய சின்னங்களை புதுப்பித்து பாதுகாக்கும் பணியை துவக்கியுள்ளது.

சி.எம்.டி.ஏ. சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம், சென்னை பெருநகரப் பகுதி ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 5,904 சதுர கி.மீ. சென்னை மாநகரப் பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

சென்னைப் பெருநகரப் பகுதி விரிவாக்கத்துக்குப் பிறகு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருமழிசை, மீஞ்சூர் ஆகிய பகுதிகளுக்குப் புதிய நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களைத் தயாரிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு முடிவு செய்தது.

conservation,historic places,project for renovation, ,பாதுகாப்பதற்கான திட்டம், பெருநகர வளர்ச்சிக் கழகத்தால் ஏற்பாடு, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் புதுப்பித்தல்

இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த கட்டமாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம், காஞ்சிபுரத்தின் வரலாற்று பாரம்பரிய சின்னங்களை புதுப்பித்து பாதுகாக்கும் பணியை துவக்கியுள்ளது.

இதற்காக காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 98.92 சதுர கி.மீ. பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் பாரம்பரிய தொழில்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஆலோசகரை நியமிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழு முடிவு செய்துள்ளது.

அதற்கான ஆலோசகரையும் தேர்வு செய்யும் பணியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு ஈடுபட்டுள்ளது.

Tags :