Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி துவக்கம்

வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி துவக்கம்

By: Monisha Wed, 30 Dec 2020 09:38:16 AM

வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி துவக்கம்

இன்னும் ஒருசில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இதையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதற்கிடையே சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவுக்கு தேவையான எந்திரங்கள் மாவட்டந்தோறும் இருப்பு வைக்கப்படுகிறது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பழனி, திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, வேடசந்தூர் ஆகிய ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த ஏழு தொகுதிகளிலும் மொத்தம் 2 ஆயிரத்து 103 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. மேலும் 4 ஆயிரத்து 275 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 9 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 9 வாக்குப்பதிவை உறுதிசெய்யும் எந்திரங்கள் இருந்தன.

election,reservation,voting,machinery,engineers ,தேர்தல்,முன்னேற்பாடு,வாக்குப்பதிவு,எந்திரங்கள்,பொறியாளர்கள்

இதுதவிர மராட்டியத்தில் இருந்து 370 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 3 ஆயிரத்து 520 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 3 ஆயிரத்து 810 வாக்குப்பதிவை உறுதிசெய்யும் எந்திரங்கள் கடந்த வாரம் கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தும் கலெக்டர் அலுவலகத்தில் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் மராட்டியத்தில் இருந்து வந்த எந்திரங்களை முதல்கட்ட சரிபார்ப்பு பணி நேற்று தொடங்கியது.

இதற்காக அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு எந்திரங்கள் வெளியே கொண்டு வரப்பட்டன. பின்னர் அவற்றை சரிபார்க்கும் பணி தொடங்கியது. இதற்காக பெங்களூருவில் இருந்து நான்கு பொறியாளர்கள் வந்திருந்தனர். அவர்களின் மேற்பார்வையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. அனைத்து எந்திரங்களையும் சரிபார்க்க 15 நாட்கள் வரை ஆகும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags :
|