Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா திடீர் இறப்பை தடுக்கும் ஊசி மருந்து; மருத்துவர்கள் தகவல்

கொரோனா திடீர் இறப்பை தடுக்கும் ஊசி மருந்து; மருத்துவர்கள் தகவல்

By: Nagaraj Mon, 31 Aug 2020 12:54:04 PM

கொரோனா திடீர் இறப்பை தடுக்கும் ஊசி மருந்து; மருத்துவர்கள் தகவல்

கொரோனா திடீர் இறப்பை தடுக்கும் ஊசி மருந்து... Low Molecular Weight Heparin என்ற ஊசி மருந்தால், கொரோனாவால் ஏற்படும் திடீர் இறப்புகளில் 90 சதவிகிதத்தை தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்து, ரத்தம் கெட்டித் தன்மை அடைவதை தடுத்து அதை மென்மையானதாக மாற்றும் திறன் உடையதாகும். கொரோனா நோயாளிகளில், இதயம், மூளை, சிறுநீரகம் ஆகியவற்றுக்கு போகும் ரத்த குழாய்களில் மிக நுண்ணிய ரத்தக் கட்டிகள் ஏற்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்டவை ஏற்பட்டு மரணம் சம்பவிக்கின்றது.

multiple,injection,corona,hospital,death ,பலமடங்கு, ஊசி மருந்து, கொரோனா, மருத்துவமனை, இறப்பு

இதை கண்டுபிடிக்க D-dimer என்ற சோதனை நடத்தப்படும். கொரோனா நோயாளிகளுக்கு D-dimer அளவு அதிகம் இருக்கும். இந்த நிலையில் Low Molecular Weight Heparin அதை சரி செய்து மரணத்தில் இருந்து கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஊசி மருந்தை போட்டால், மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும், கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய இயலும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த மருந்து கொரோனா சிகிச்சையில் முக்கிய இடத்தைப் பெற்றாலும், இப்போது அதன் உபயோகம் பலமடங்கு அதிகரித்துள்ளது.

Tags :
|