Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திமுகவின் புகார்கள் குறித்து விசாரிக்கலாம்; பாஜக அண்ணாமலை தகவல்

திமுகவின் புகார்கள் குறித்து விசாரிக்கலாம்; பாஜக அண்ணாமலை தகவல்

By: Nagaraj Wed, 23 Dec 2020 1:16:00 PM

திமுகவின் புகார்கள் குறித்து விசாரிக்கலாம்; பாஜக அண்ணாமலை தகவல்

திமுக புகார் மனுவை விசாரிக்கலாம்... அதிமுகவினரின் ஊழல் புகார்கள் குறித்து திமுக அளித்த மனுவை விசாரிக்க ஜனநாயகத்தில் இடம் இருப்பதாக பாஜக மாநிலத் துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசு ஊழல் செய்து வருவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அவரிடம் அதிமுகவினர் செய்த ஊழல் குறித்த 97 பக்க அளவிலான மனுவை அளித்தார்.

மனுவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் வேலுமணி, அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் மீது ஊழல் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.

bjp,state vice president,dmk complaint,democracy ,பாஜக, மாநிலத் துணை தலைவர், திமுக புகார் மனு, ஜனநாயகம்

மு.க ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, ‘ அவர் கூறுவது அனைத்தும் பொய் குற்றச்சாட்டுகள். மலிவான விளம்பரத்தை தேடிக் கொள்ள இவ்வாறு செய்கிறார். திமுக ஆட்சியில் தான் ஊழல், தில்லுமுல்லு அனைத்தும் நடந்தது’ என காட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து பாஜக மாநிலத் துணை தலைவர் அண்ணாமலை கூறுகையில், “திமுக அளித்த மனுவை விசாரிக்கலாம். தேர்தலில் எந்த கட்சி பணம் கொடுத்தாலும் பாஜக அதனை எதிர்க்கும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags :
|