Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் பிரிக்க வலியுறுத்தல்

தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் பிரிக்க வலியுறுத்தல்

By: Nagaraj Wed, 07 Dec 2022 12:04:05 PM

தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் பிரிக்க வலியுறுத்தல்

கொழும்பு: தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி., சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


நேற்று நாடாளுமன்றத்தில் விசேட ஒழுங்குப்பிரச்சினையினை எழுப்பி கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார், இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படவேண்டும். ஆனால் 94 சதவீதமான காணிகள் பெரும்பான்மையினருக்கு பிரிக்கப்படுள்ள நிலையில் மிகுதிக் காணிகள் சிறுபான்மை மக்களுக்கு பிரிக்கப்பட வேண்டும்.

minority people,minister,batticaloa,ready,lands ,
சிறுபான்மை மக்கள், அமைச்சர், மட்டக்களப்பு, தயாராக உள்ளோம், காணிகள்

மிகுதிக் காணிகள் பகிரப்படாவிடின் இதற்கு எதிரான சட்ட நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம். அல்லது இது குறித்து உங்களுடன் பேசுவதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.“ என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினை கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து பேசியிருந்தார்.

Tags :
|