Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்தில் அடுத்த ஆண்டுக்கான பரீட்சைகளை ஒத்தி வைக்க வலியுறுத்தல்

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டுக்கான பரீட்சைகளை ஒத்தி வைக்க வலியுறுத்தல்

By: Nagaraj Mon, 31 Aug 2020 5:53:10 PM

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டுக்கான பரீட்சைகளை ஒத்தி வைக்க வலியுறுத்தல்

பரீட்சைகளை ஒத்தி வைக்க வலியுறுத்தல்... கொரோனா வைரஸின் நெருக்கடி நிலையில் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டுக்கான A-level மற்றும் GCSE பரீட்சைகளைப் பிற்போடுமாறு தொழிற்கட்சி அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

கொரோனா நெருக்கடியால் ஐந்து மாதங்கள் கல்வியைத் தவறவிட்ட மாணவர்களுக்கு கூடுதல் கற்பித்தல் நேரத்தை அனுமதிக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டு பரீட்சைகள் மே முதல் ஜூன் அல்லது ஜூலை வரை பிற்போடப்பட வேண்டும் என தொழிற்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாடுகளின் பின்னரான புதிய இயல்பு நிலையின் கீழ் இந்த வாரம் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களை தயாராகுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மில்லியன் கணக்கான மாணவர்கள் பாடசாலைகளுக்குத் திரும்புவது குறித்து பாடசாலைகளின் தலைவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

students,core learning,government,exam,postpone ,மாணவர்கள், முக்கிய கற்றல், அரசாங்கம், பரீட்சை, ஒத்திவைக்க

இதேவேளை, பரீட்சைகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தொழிற்கட்சியின் நிழல் கல்விச் செயலாளர் கேற் கிரீன் (Kate Green), “செப்டம்பரில் 11 மற்றும் 13ஆம் ஆண்டுக்கான கல்வியைத் தொடங்கும் மாணவர்கள் பெரும் தடையைக் கடக்கவேண்டியுள்ளது. பல மாதங்களாக பாடசாலைக் கல்வியை மாணவர்கள் தவறவிட்டுள்ளார்கள்.

இந்நிலையில், முக்கிய கற்றல் காலத்தை தவறவிட்ட நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் குறித்து அரசாங்கம் கரிசனை கொள்ளாவிட்டால் மே மாத பரீட்சை கடினமாக இருக்கும். மாணவர்களுக்கு தெளிவும் உறுதியும் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|