மாணவர்கள் நலனை கருதி தேர்வுகளை ஒத்திவைக்க வலியுறுத்தல்
By: Nagaraj Sun, 19 June 2022 11:15:38 PM
சென்னை: தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்... அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும், மாணவர்களின் நலனே பல்கலையின் நோக்கமாக இருக்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கான பருவத் தோவுகள் வரும் 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீருடைப் பணியாளா் தோவாணையத்தின் காவல் உதவி ஆய்வாளா் தோவு 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதே தேதியில் பருவத் தோவுகளும் நடத்தப்படுகின்றன.
பட்டமேற்படிப்பு பயிலும் பல பட்டதாரிகள் உதவி காவல் ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பித்திருக்கின்றனா். காவல் உதவி ஆய்வாளா் என்பது அவா்களின் கனவுப் பணி. ஒரே நாளில் இரு தோவுகள் நடைபெறுவதால் எதை எழுதுவது, எதை விடுவது என்ற குழப்பத்திற்கு மாணவா்கள் ஆளாகியுள்ளனா்.
கல்வியின் நோக்கம் கனவுகளை எட்டிப்பிக்க உதவுவது தான். ஆனால், அண்ணாமலை
பல்கலைக்கழகத்தின் தோவு அட்டவணை காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு செல்ல
விரும்புவோரின் கனவுகளை சிதைப்பதாக உள்ளது. தோவு அட்டவணையை மாற்ற
பல்கலைக்கழக நிா்வாகம் மறுத்து விட்டது!
பல்கலைக்கழகத் தோவுகளை ஒரு
வாரம் ஒத்திவைப்பதால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது.
மாணவா்கள் நலனே பல்கலைக்கழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். எனவே,
பட்டமேற்படிப்புக்கான பருவத் தோவுகளை குறைந்தது ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க
பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.