Advertisement

ஆதார் எண் வாயிலாக உடனடி பான் எண் பெறும் வசதி

By: Nagaraj Fri, 29 May 2020 8:29:32 PM

ஆதார் எண் வாயிலாக உடனடி பான் எண் பெறும் வசதி

உடனடியாக ஆதார் மூலம் பான் எண் பெறும் வசதியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை அளிக்கும் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடி பான் எண் அளிக்கும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி விரிவான விண்ணப்பம் ஏதும் பூர்த்தி செய்யாமலே ஆதார் எண்ணை அளிப்பதன் மூலம் உடனடியாக பான் எண்ணை பெற முடியும் எனத் தெரிவித்து இருந்தார்

இது சோதனை முறையில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்கனவே தினம் 10 நிமிடங்களுக்கு நடைமுறையில் இருந்தது. அப்போது உடனடியாக பான் எண்கள் ஒதுக்கப்பட்டன.

electronic,permanent account,nirmala sitharaman,aadhaar no ,மின்னணு, நிரந்தர கணக்கு, நிர்மலா சீதாராமன், ஆதார் எண்

கடந்த மார்ச் மாத்ம் 25 ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் தினசரி 10 நிமிடம் நடந்த இட ஒதுக்கீட்டில் இதுவரை 6,77,680 பான் எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நேற்று இந்த வசதியை நிர்மலா சீதாராமன் முறைப்ப்டி தொடங்கி வைத்துள்ளார். பொதுமக்களில் ஆதார் எண் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை வைத்திருப்போருக்கு இந்த வசதி தற்போது அளிக்கப்படுகிறது.

இந்த வசதி காகிதமில்லா முறையில் செயல்படுகிறது. இந்த ஒதுக்கீடு மூலம் மின்னணு நிரந்தர கணக்கு எண் (இ பான்) இலவசமாக அளிக்கப்படுகிறது.

Tags :