Advertisement

பள்ளிக்கல்வித்துறை... பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

By: vaithegi Mon, 25 July 2022 1:51:16 PM

பள்ளிக்கல்வித்துறை... பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் சமீப நாட்களாக மக்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தின் காரணமாக ஏற்பட்ட கலவரத்தின் விளைவாக தமிழக பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள புதிய அறிவுறுத்தல்களை பற்றி கீழே காணலாம்.

பள்ளியில் எந்த நிகழ்வும் நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலர் நேரடி கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.
மாணவர்கள் அடித்துக் கொள்ளுதல், சாலை விபத்து, உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம் நடைபெற்றால் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலரின் அனுமதியின் பேரில் தான் பத்திரிக்கை செய்தி தர வேண்டும்.
தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்கும் முன்னே வந்து விட வேண்டும்
பேருந்துகளில் வரும் மாணவர்கள் மேற்கூரையில் அமர்ந்து பயணிப்பதை தவிர்க்க மாணவர்களுக்கு காலை வணக்க கூட்டங்களில் தக்க அறிவுரைகளை வேண்டும்.

பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறைவிட்டால் அது குறித்தும் முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மரத்தின் அடியிலோ அல்லது பழுதான கட்டங்களில் வகுப்பு நடத்த கூடாது.
தனியார் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளதா?விடுதிக் கட்டடங்கள்,தீ தடுப்பு ஏற்பாடுகள் உரிய அனுமதி பெற்று உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

department of school education,school ,பள்ளிக்கல்வித்துறை,பள்ளி

ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் கைபேசி பேசுவதை தவிர்க்க வேண்டும்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை தலைமை ஆசிரியர் நேரில் ஆய்வு செய்து தரத்தையும், சுகாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.
மாணவர்களை எந்த காரணம் கொண்டும் ஆசிரியர்கள் சொந்த வேலைக்கு பயன்படுத்தக் கூடாது.
மாணவர்களுக்கு அவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது.
பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்பதுடன்

மாணவர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி தலைமையாசிரியர் பள்ளி வளாகம் கழிப்பறை மற்றும் வகுப்பறை ஆகியன தூய்மையாக உள்ளதா என்பதை சரி பார்த்து அதனை பராமரிக்க வேண்டும்.
பள்ளியின் வளர்ச்சியிலும் மாணவர்களின் வளர்ச்சியிலும் அனைத்து ஆசிரியர்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
மாணவர்கள் மோதிரம், செயின், கையில் ஒயர், போன்றவற்றை கண்டிப்பாக அணிந்து வரக்கூடாது.
மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் மாணவர்களுக்கு வாய்ப்பாடு பயிற்சி அளித்திட வேண்டும்.

Tags :