Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லிக்கு வரும் விமான பயணிகள் கட்டாயம் ஏழு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல்

டெல்லிக்கு வரும் விமான பயணிகள் கட்டாயம் ஏழு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல்

By: Karunakaran Wed, 22 July 2020 11:30:15 AM

டெல்லிக்கு வரும் விமான பயணிகள் கட்டாயம் ஏழு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகியன அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. டெல்லியில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலையம் வந்த பின் பயணிகள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

isolated,delhi,air passengers,seven days ,தனிமைப்படுத்தல், டெல்லி, விமான பயணிகள், ஏழு நாட்கள்

கொரோனா பரிசோதனைக்கு பின் தனிமைப்படுத்தப்படுவார்கள். நோய் அறிகுறி இல்லை என்றால் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இனிமேல் டெல்லி வரும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயம் 7 நாட்கள் பெய்டு கோரன்டைனில் இருக்க வேண்டும். அதன்பின் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

மேலும் இனி, கர்ப்பிணி பெண்கள், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மிகவும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெற்றோர்கள் ஆகியோரிடம் சில தகவல்கள் பெற்றுக் கொண்டு அதன்பின் தான் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|