Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பருவமழை கால முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்

பருவமழை கால முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்

By: Nagaraj Fri, 11 Aug 2023 8:15:42 PM

பருவமழை கால முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்

சென்னை: முன்னெச்சரிக்கை பணிகள்... தமிழ்நாட்டில் பருவமழை காலம் தொடங்க இருப்பதால் அதற்கு முன்பாக அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அரசு அறிவித்துள்ளது. இதை அடுத்து மாநகராட்சி பகுதிகளில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமடைந்துள்ளது.

இன்னும் சில வாரங்களில் பருவமழை தொடங்க இருப்பதால் அதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசின் நகர்புற நிர்வாக துறை உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேக்க இடங்கள், எச்சரிக்கை உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்ற வருகின்றனர்.

கடந்த ஆண்டு பெருவாரியான ஆறுகள் மற்றும் குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டதால் நடைபாண்டில் பணிகள் குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி பகுதியில் வடிகால், கால்வாய் மற்றும் ஆறுகளை சுத்தம் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக நீர்களில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரைகளை ஜேசிபி கொண்டு அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

rain,opportunity,weather,research center,employee,corporation ,
மழை, வாய்ப்பு, வானிலை, ஆய்வு மையம், பணியாளர், மாநகராட்சி

மேலும் குப்பைகள், நீர்த்தேகங்கள் தேங்கியுள்ள கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியும் இன்னும் சில நாட்களில் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ரெட்டைவாய்க்கால், உயக்கொண்டான் வாய்க்காலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்ய திருச்சி மாநகராட்சியின் சார்பில் 1.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நீர் தேக்கம், நீர் தேங்கும் குடியிருப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ரெட்டை வாய்க்காலை சுத்தம் செய்வதற்காக 19.2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் நடப்பாண்டில் மழை குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|