Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக பள்ளியில் செப்டம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரைக்கும் தூய்மை நிகழ்வுகளை செய்ய அறிவுறுத்தல்

தமிழக பள்ளியில் செப்டம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரைக்கும் தூய்மை நிகழ்வுகளை செய்ய அறிவுறுத்தல்

By: vaithegi Sat, 03 Sept 2022 7:48:16 PM

தமிழக பள்ளியில் செப்டம்பர் 1  முதல் 15 ஆம் தேதி வரைக்கும் தூய்மை நிகழ்வுகளை செய்ய அறிவுறுத்தல்


சென்னை: மத்திய கல்வி அமைச்சகம் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரைக்கும் துாய்மை நிகழ்வுகளை செய்ய திட்டமிட்டிருக்கிறது. . இன்றும் நாளையும் சமூக விழிப்புணர்வு தினம் என்பதால் சமூக இணையதளம் மற்றும் குழு கூட்டங்கள் மூலமாக சுத்தம் மேம்பாடு மற்றும் COVID 19 பற்றிய விழிப்புணர்வை வழங்கலாம் எனவும், கொரோனா தடுப்பூசிகள், தூய்மை நிகழ்வுகள் பற்றிய அருகிலுள்ள கிராமங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்ததாக திங்கட்கிழமை பசுமை பள்ளி இயக்க நாள் என்பதால் பள்ளியில் தண்ணீர் சேகரிப்பு மற்றும் நீர் ஆதாரங்கள் குறித்தான விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக செப்.6 மற்றும் 7 ஆம் தேதிகளில் பள்ளி மாணவர்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதார பழக்கங்கள் குறித்து ஓவிய போட்டி, பேச்சுப்போட்டி, வசனம் மற்றும் பாட்டு போட்டி போன்ற வற்றை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

cleanliness event,school ,தூய்மை நிகழ்வு,பள்ளி

செப்.8 மற்றும் 9 கைகழுவும் தினம் என்பதால் அன்றாட வாழ்வில் கைகளை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது, உணவுக்கு முன்னரும் பின்னரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் போன்ற விழிப்புணர்வை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செப்.10 மற்றும் 11 தன் சுத்தம் மற்றும் சுகாதார தினம் என்பதால் தினமும் மாணவர்கள் கை, கால்களில் உள்ள நகங்களை தூய்மையாக வெட்ட வேண்டும், சுகாதாரமான ஆடைகளை உடுத்த வேண்டும் ஆகியவற்றை அறிவுறுத்த வேண்டும். பின்னர், செப்.12 ஆம் தேதி தூய்மை நிகழ்வுகள் சார்ந்த கண்காட்சி தினம் என்பதால் தூய்மை சார்ந்த நிகழ்வுகளை ஓவியம் அல்லது கார்டூன்களாக வரைந்து பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வந்து காணும்படி செய்யலாம். அடுத்ததாக செப்.13 மற்றும் 14 பள்ளியில் தூய்மை சார்ந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும், செப்.15 ஆம் தேதி தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :