Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

By: vaithegi Sun, 03 July 2022 7:08:27 PM

தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

தமிழகம்: தமிழகத்தில் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் தொடக்க பள்ளி மாணவர்களும் நீண்ட நேரம் முகக்கவசம் அணிந்தபடி இருப்பது மிகவும் சிரமத்தை அளிக்கும். இதற்கிடையில் மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடக்க பள்ளி மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு சில பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர். மறுபுறம் கொரோனா ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என அரசு வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கின்றன.

parents,corona,tamil nadu ,பெற்றோர்கள் ,கொரோனா ,தமிழகம்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் மேற்கொண்டு கொரோனா தீவிரமாக பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு மேலும் தொடர்ந்து கொரோனா தொற்று தினசரி அதிகரித்துக் கொண்டே சென்றால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தொடக்க பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது..

Tags :
|