Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் அட்டையில் ஆன்லைன் வழியாக புதிய உறுப்பினர் சேர்ப்பதற்கான வழிமுறைகள்:

ரேஷன் அட்டையில் ஆன்லைன் வழியாக புதிய உறுப்பினர் சேர்ப்பதற்கான வழிமுறைகள்:

By: vaithegi Sat, 11 June 2022 9:30:42 PM

ரேஷன் அட்டையில் ஆன்லைன் வழியாக புதிய உறுப்பினர் சேர்ப்பதற்கான வழிமுறைகள்:

“ஒரே நாடு ஒரே ரேஷன்”, என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலமாக ரேஷன் கடைகளில் முறைகேடு ஏற்படுவது குறைந்துள்ளது. இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கார்டில் வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். நீங்கள் புதியதாக திருமணமானவராக இருப்பின் உங்களின் மனைவியின் பெயர் இணைக்கப்பட வேண்டும். இதற்கு திருமணச் சான்று, கணவரின் ரேஷன் கார்டு, மருமகளின் பெயர் பழைய ரேஷன் ஆடையில் இருந்து நீக்கப்பட்டதற்கான சான்றிதழ், தாய்வழி ரேஷன் கார்டு மற்றும் தாய்வழி ஆதார் அட்டை, அதில் கணவரின் பெயர் உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். குழந்தை பிறந்துள்ளதெனில் அந்த குழந்தையின் பெயரும் ரேஷன் கார்டில் கட்டாயமாக சேர்க்க வேண்டும். இதற்கு பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அத்துடன் இதற்கு ஆதார் அட்டையின் ஆவணத்தையும் வைத்திருக்க வேண்டும்.

முதலாவதாக https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்த இணையதளம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது.
இதில் பயனாளர் நுழைவு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.இதையடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
அடுத்ததாக கேப்ட்சா எண்ணை கீழே உள்ள கட்டத்தில் கொடுக்க வேண்டும்.
அதன் பின்னர் முகப்பு பக்கத்தில் “புதிய உறுப்பினர் பெயர் சேர்க்க” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது புதிய பக்கம் திறக்கப்படும். இதில் புதிய உறுப்பினரின் தகவல்களை உள்ளிட வேண்டும்.
இதையடுத்து விவரங்களை சரியாக நிரப்பிய பிறகு தேவனையான ஆவணங்களின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு “சமர்ப்பி” என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
இறுதியாக உங்களின் விண்ணப்பம் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு புதிய புதுப்பிக்கப்பட்ட ரேஷன் கார்டு தபால் மூலம் உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும்.

Tags :