Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உயிரிழந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்ய அறிவுறுத்தல்

உயிரிழந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்ய அறிவுறுத்தல்

By: Nagaraj Tue, 13 Dec 2022 10:54:15 AM

உயிரிழந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்ய அறிவுறுத்தல்

இலங்கை: கால்நடைகள் உரிய முறையில் அடக்கம்... வட மாகாணத்தில் காலநிலை மாற்றத்தால் உயிரிழந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்வதனை உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தொடர்ந்து தெரிவருவதாவது “அண்மைய நாட்களில் வெப்பநிலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத கால்நடைகள் இறந்துள்ளன.

livestock,breeders,changes,future,burial ,கால்நடை, வளர்ப்போர், மாற்றங்கள், எதிர்காலம், அடக்கம்

இறந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்வதினை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்

ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான காலநிலை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் கால்நடை வளர்ப்பார்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|