Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா மற்றும் பிரேசிலுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கும் நடவடிக்கை தீவிரம் - ரஷியா

இந்தியா மற்றும் பிரேசிலுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கும் நடவடிக்கை தீவிரம் - ரஷியா

By: Karunakaran Thu, 12 Nov 2020 07:46:46 AM

இந்தியா மற்றும் பிரேசிலுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கும் நடவடிக்கை தீவிரம் - ரஷியா

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா இணைந்த பிரிக்ஸ் அமைப்பின் கூட்டம் ஆன்லைன் மூலம் நடந்தது.

இதில் உரையாற்றிய ரஷிய வெளியுறவு துணை மந்திரி செர்ஜெய் ரியாப்கோவ், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் நடவடிக்கை குறித்து பேசினார். இதில், பிரிக்ஸ் நாடுகளுடன் குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசிலுடன் இணைந்து தடுப்பூசி உருவாக்கும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருவதாக அவர் கூறினார்.

corona vaccine,india,brazil,russia ,கொரோனா தடுப்பூசி, இந்தியா, பிரேசில், ரஷ்யா

இதுகுறித்து செர்ஜெய் ரியாப்கோவ் கூறுகையில், தடுப்பூசி உருவாக்கம் மற்றும் தேவையான அளவு தயாரிப்பு தொடர்பாக பிரிக்ஸ் நாடுகளுடன் கூட்டாகவும், இரு தரப்பு அடிப்படையிலும் பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக பிரேசில் மற்றும் இந்தியாவுடன் தீவிரமான ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன. மேலும், தொற்று தொடங்கியது முதலே சீனாவுடன் மிகுந்த ஆழமான ஒத்துழைப்பை நல்கி வருகிறோம் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், கடந்த 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவின் பரிந்துரையின்பேரில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே கூட்டு தடுப்பூசி மையம் ஒன்றை உருவாக்குவதற்கான செயல்திட்டம் வகுக்கும் பணிகள் நடந்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.

Tags :
|
|