Advertisement

விமான நிலையங்களில குரங்கம்மை பரிசோதனை தீவிரம்

By: Nagaraj Wed, 27 July 2022 08:21:58 AM

விமான  நிலையங்களில குரங்கம்மை பரிசோதனை தீவிரம்

சென்னை: விமான நிலையங்களில் பரிசோதனை... இந்தியாவில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை கொரோனாவிற்கு அடுத்தபடியாக தற்போது குரங்கு அம்மை தொற்று அச்சுறுத்தி வருகிறது. பல வளர்ந்த நாடுகள் கூட இந்த நோய் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் ஒருவருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை தொற்று பரவாத வண்ணம் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் இருந்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களும் குரங்கமை குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

airport,experiment,monkey,laboratory,minister,information ,விமான நிலையம், பரிசோதனை, குரங்கம்மை, ஆய்வகம், அமைச்சர், தகவல்

அதில் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் முதலில் பாதிப்பு கண்டறியப்பட்டதும் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருக்கிறதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஐ.சி.எம்.ஆர். விதிகளின்படி வெளிநாடுகளில் இருந்து வருகிற அத்தனை பயணிகளையும் மாஸ் ஃபீவர் ஸ்கிரீனிங் கேம்ப்ஸ் என்ற அடிப்படையில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் ரேண்டமாக இரண்டு சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இந்த நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கேரளா, ஆந்திர எல்லைகளில் இருந்து வருபவர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா என எல்லைகளில் வருபவர்களை ஸ்டார்சுரேசன் பரிசோதனை செய்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை விமான நிலையில் தினமும் வரும் 400 பயணிகள் பரிசோதனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு நாடு முழுவதிலும் ஆய்வகங்கள் 15 இடங்களில் அமைப்பதற்கு பரிசீலனை செய்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் இருக்கிற ஆராய்ச்சி மையத்திலும் ஒரு ஆய்வகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|