Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் .. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் .. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

By: vaithegi Wed, 26 July 2023 11:41:49 AM

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்  .. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

கர்நாடகாம் : இந்த மாத தொடக்கத்திலிருந்து கர்நாடகாவில் கனமழை கொட்டி வரும் நிலையில் தட்சிண கன்னடா, உடுப்பி ,உத்தர கன்னடா மற்றும் மலை மாவட்டங்களான சிவமொக்கா ,சிக்கமங்களூர், ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து கொண்டு வருகிறது.

எனவே இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக கனமழையால் நேற்று வரை ஏழு பேர் உயிரிழந்தனர்.

public,southwest monsoon ,பொதுமக்கள் ,தென்மேற்கு பருவமழை

இந்த நிலையில் கர்நாடகாவில் கடற்கரையோர பகுதி வடக்கு உள் மாவட்டங்களில் கனமழையால் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கண்டறியப்பட்ட இடங்களில் அரசு ஆய்வு செய்து உன்னிப்பாக கவனித்து கொண்டு வருகிறது.

இதனை அடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து கொண்டு வருகிறது. குறிப்பிட்ட இடங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த மாநில முதல்வர் சித்தராமையாதெரிவித்துள்ளார்

Tags :
|