Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்துவதால் சென்னையில் தீவிர கண்காணிப்பு

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்துவதால் சென்னையில் தீவிர கண்காணிப்பு

By: vaithegi Sat, 18 June 2022 6:53:31 PM

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்துவதால்  சென்னையில் தீவிர கண்காணிப்பு

சென்னை: மத்திய அரசு கடந்த ஜூன் 14ஆம் தேதி இந்திய ராணுவத்தில் ஆட் சேர்ப்பதற்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இதனையடுத்து, மத்திய அரசின் இந்த புதிய திட்டத்திற்கு பீகார், உத்திரபிரதேசம், ஹரியானா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சாலைகளில் உள்ள பேருந்துகளை எரிப்பது, ரயில்களை கொளுத்துவது என கலவரம் செய்த படி இருக்கின்றனர்.

பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து தற்போது சென்னையிலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்து விட்டனர்.

அதாவது, இன்று காலை சென்னையில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து ஆரணி, கோவை, திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர்கள் பலர் தலைமைச் செயலகம் அருகே ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து உடனே தலைமைச் செயலகத்துக்கு சென்ற போலீசார் இந்த போராட்டத்தை கலைக்க முயற்சித்தனர்.

youth,struggle,indian army ,இளைஞர்கள் ,போராட்டம் ,இந்திய ராணுவம்

போலீஸாரும் இளைஞர்களிடம் போராட்டத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். இளைஞர்கள் போராட்டம் நடத்துவதில் தீவிரமாக இருந்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இளைஞர்களையும் கைது செய்து போலீசார் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்து சென்றனர். மேலும், இளைஞர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதன் காரணமாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்து மேலும் சில மாவட்டங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்த தயாராக இருக்கும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பு வேலையில் ஈடுபட வேண்டும் என அந்தந்த மாவட்ட போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|