Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்புக்கு இடைக்காலத் தடை

அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்புக்கு இடைக்காலத் தடை

By: Nagaraj Wed, 02 Dec 2020 08:35:16 AM

அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்புக்கு இடைக்காலத் தடை

இடைக்காலத் தடை... அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அரியர் மாணவர்கள் பாஸ் என்ற பல்கலைக்கழகங்களின் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தேர்வு நடத்தாமல் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்க முடியாது என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமமும், பல்கலைக் கழக மாநில குழுவும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

interim,students,inquiry,aryan,adjournment ,இடைக்காலத்தடை, மாணவர்கள், விசாரணை, அரியர், ஒத்திவைப்பு

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், சென்னை பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை அரியர் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தாமல் முடிவுகளை அறிவித்தன. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, விதிகளை மீறி பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. வழக்கு விசாரணையில் இருக்கும்போது பல்கலைக்கழகங்கள் எப்படித் தேர்வு முடிவுகளை அறிவித்தது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் தமிழக அரசு இது தொடர்பாகப் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

மேலும் வழக்கு விசாரணையை யூடியூபில் வெளியிட்டதற்குக் கண்டனம் தெரிவித்ததுடன், மாணவர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்படும். இனி அரியர் தேர்வு ரத்து தொடர்பான வழக்கு ஆன்லைனில் அல்லாமல் நேரடியாக மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags :
|