Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜுலை 15ம் தேதி வரை நீட்டிப்பு

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜுலை 15ம் தேதி வரை நீட்டிப்பு

By: Nagaraj Sat, 27 June 2020 10:03:38 AM

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜுலை 15ம் தேதி வரை நீட்டிப்பு

ஜுலை 15ம் தேதி வரை நீட்டிப்பு... கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக மார்ச் மாதத்தில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை ஜூலை 15 வரை நீட்டிக்கப்படுகிறது.

ஜூலை 15-ந்தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியதால் மார்ச் மாதம் 3-வது வாரத்தில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடைவிதித்தது.

ஐந்தாவது கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 1-ந்தேதியில் இருந்து ஜூன் 30-ந்தேதி வரை அமலில் இருக்கிறது. இதை மத்திய அரசு லாக்டவுன் என்று கூறாமல் ‘UnlockDown’ஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அளிக்கப்படும் என்று கூறியது. ‘Unlockdown’ முதல் கட்டத்தில் பஸ் போக்குவரத்து உள்ளிட்ட பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்பின் கோவில்கள், மால்கள், ஓட்டல்கள் திறக்கப்படும் என்று அறிவித்தது.

international,aviation,on july 15,extension of ban ,சர்வதேசம், விமான போக்குவரத்து, ஜுலை 15ம் தேதி, தடை நீட்டிப்பு

பின்னர் சர்வதேச விமான போக்குவரத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையில் ஜூலை மாதம் சர்வதேச விமான போக்குவரத்து குறித்து ஆலோசனையை தொடங்குவோம் என்று விமான போக்குவரத்து துறை மந்திரி தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதானால் ஜூலை 15-ந்தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்து கிடையாது என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சரக்கு விமான போக்குவரத்திற்கு விலக்கி அளிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் சிறப்பு அனுமதி பெற்ற விமானங்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா சொந்த நாட்டிற்கு அழைத்து வருகிறது. அதேவேளையில் மே 25-ந்தேதியில் உள்நாட்டு விமான சேவைகளையும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :