Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி.. தமிழக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு..

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி.. தமிழக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு..

By: Monisha Wed, 13 July 2022 8:05:51 PM

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி.. தமிழக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு..

தமிழ்நாடு: மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை காணவும், அதில் பங்கேற்கும் சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாடவும் பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28, 2022 முதல் ஆகஸ்ட் 10, 2022 வரை சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.இதையொட்டிய ஒரு சிறப்பு ஏற்பாடாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.

பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.“ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் நடைபெறும் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கிடையே சதுரங்கம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம், பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும்.இத்திட்டம் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்” என அறிவித்திருந்தார்.

chess olympiad,students,tamilnadu,useful ,தமிழ்நாடு,சர்வதேச ,
செஸ் ஒலிம்பியாட் ,மாணவர்கள்,

பள்ளி அளவில் சதுரங்கப் போட்டிகள் நடைபெற்று, அதில் வெற்றி பெறுவோர், வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பின் அதன் வெற்றியாளர்கள் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்பார்கள். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெல்பவர்கள் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்று விளையாடுவார்கள். அதிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளைக் காணவும் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாடவும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.

மாணவர்களின் நுண்ணறிவுத் திறன், செயற்பாட்டுத் திறன், ஆளுமைத் திறன் என பல்வேறு திறன்களை சதுரங்கப் போட்டிகளின் வழியே வெளிக்கொணரும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு இப்போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :