Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போர்ப்பயிற்சியை நிறுத்த கூறி சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச நாடுகள்

போர்ப்பயிற்சியை நிறுத்த கூறி சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச நாடுகள்

By: Nagaraj Mon, 08 Aug 2022 7:13:29 PM

போர்ப்பயிற்சியை நிறுத்த கூறி சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச நாடுகள்

வாஷிங்டன்: தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை தன்னுடன் அதிகாரப்பூர்வமாக இணைப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொண்டுள்ளது. 'தேவைப்பட்டால் தைவானை கைப்பற்றுவோம்' என்றும் சீனா தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சமீபத்தில் வந்தார். இது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் வந்து சென்ற அடுத்த நாள் முதல், தென் சீன கடல் பகுதியில், தைவான் ஜலசந்தியில் சீன ராணுவம் நான்கு நாள் போர் பயிற்சியை துவக்கியது. தைவான் கடல் பகுதியில் ஏவுகணைகளை சீனா ஏவி வருகிறது.

இந்த போர் பயிற்சி நடவடிக்கைகள் தொடரும் என்றும் சீனா எச்சரித்துள்ளது. இந்நிலையில் கம்போடியா தலைநகர் நோம் பென்னில், ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் நடந்து வருகிறது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களான ஆன்டனி பிளிங்கன், பென்னி வாங், ஹயாஷி யோஷிமாஸா ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

chinese military,international countries,warning,military exercises,taiwan,usa ,சீன ராணுவம், சர்வதேச நாடுகள், எச்சரிக்கை, போர்பயிற்சி, தைவான், அமெரிக்கா

தைவான் ஜலசந்தியில் சீனா நடத்தி வரும் போர் பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். சீனாவின் ஐந்து ஏவுகணைகள், ஜப்பானுக்கு உட்பட்ட பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளன. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவான் ஜலசந்தி முழுதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை ஆசியான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

தைவான் கடல் பகுதியில் பதற்றத்தை குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, ஆசியான் அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கை பாராட்டத்தக்கது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கு இடையே அறிவிக்கப்படாத படைவிலக்கப் பகுதியான தைவான் நீரிணை நடுக்கோட்டுக்கு அருகே இருநாடுகளின் பத்துப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. படைவிலக்கப் பகுதிக்கு வந்துள்ள சீனக் கப்பல்களின் நகர்வைக் கண்காணித்து வருவதாகத் தைவான் கடற்படை தெரிவித்துள்ளது.

Tags :
|