Advertisement

கண் டாக்டருக்கு சர்வதேச கௌரவம்..

By: Monisha Mon, 04 July 2022 8:16:20 PM

கண் டாக்டருக்கு சர்வதேச கௌரவம்..

சென்னை: டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவர் சூசன் ஜேக்கப்புக்கு சர்வதேச கௌரவம். கண் மருத்துவவியல் துறைக்காகவே பிரத்யேகமாக வெளியாகிற முதன்மையான சர்வதேச இதழ் ' தி ஆப்தால்மாலஜிஸ்ட்'. கண் மருத்துவ துறையில் சிறப்பாக பங்களித்து வரும் ஆற்றல்மிக்க மருத்துவர்களின் பட்டியல் ஆண்டுதோறும் அந்த இதழில் வெளியாகும். நவீன தொழில்நுட்பம், மருத்துவ மேம்பாட்டு நடவடிக்கைகளில் சிறந்து விளங்குகிற சர்வதேச மருத்துவர்கள் 100 பேர் அதில் இடம்பெற்று இருப்பர்.
அந்த வகையில் நிகழாண்டில் டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனைச் சேர்ந்த முதுநிலை மருத்துவர் சூசன் ஜேக்கப் அந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளார். இதற்காக அவருக்கு மருத்துவத் துறை வல்லுனர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கருவிழி ஒளி விலகலை சரி செய்வதற்கான அறுவை சிகிச்சை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை ஆகியவற்றில் சிறப்பாக அனுபவத்தை கொண்டவர் டாக்டர் சூசன் ஜேக்கப் என்பது குறிப்பிடத்தக்கது.

eye specialist,award,honour,proud , அகர்வால்ஸ் ,மருத்துவர் ,சூசன் ஜேக்கப்,கௌரவம்,

இது குறித்து அகர்வால்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் கூறியது. இந்த கௌரவத்தை பெறுவதற்கு டாக்டர் சுசன் முழு தகுதி பெற்றவர். நவீன அருவ சிகிச்சை மூலம் பல சாதனைகளை அவர் படைத்து உள்ளார்.
குறிப்பாக, கூம்புக் கருவிழி எனப்படும் கண் முன்புற திசு வீக்க பாதிப்புக்கு அவர் நவீன முறையில் சிகிச்சை அளித்து மறு வாழ்வு பலருக்கு கொடுத்து உள்ளார். இவர் அமெரிக்க, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் சர்வதேச விருதுகளை ஏற்கனவே பெற்றார் என்பதும் கடந்த ஆண்டும் ' தி ஆப்தால்மாலஜிஸ்ட்' இதழின் சிறந்த மருத்துவர் பட்டியலில் அவர் தேர்வாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|