Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது

இந்தியா முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது

By: Nagaraj Thu, 22 June 2023 12:41:39 PM

இந்தியா முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது

புதுடில்லி: சர்வதேச யோகா தினம் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. தலைவர்கள், ராணுவ வீரர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

9-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் யோகா செய்தார் நாட்டின் முதல் குடிமகளான திரவுபதி முர்மு. மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள யோகா தின வாழ்த்து செய்தியில், உடலுக்கும் மனதுக்கும் இடையே யோகா ஒரு சமநிலையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.

yoga day,border,hill country,nationwide,observance ,யோகா தினம், எல்லை, மலைப்பகுதி, நாடு முழுவதும், கடைப்பிடித்தல்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ரஜ்நாத் சிங், கடற்படை வீரர்களுடன் இணைந்து யோகா செய்தார். திருவனந்தபுரத்தில் ராணுவ வீரர்கள் தேசிய கொடியின் மூவர்ணத்தில் நீச்சல் உடை அணிந்து தண்ணீரில் இறங்கி யோகா மேற்கொண்டனர்.

சிக்கிமில் பனிபடர்ந்த மலைப்பகுதியில் கடும் குளிருக்கு இடையே ராணுவ வீரர்கள் யோகா செய்தனர். மறுபுறம், ராஜஸ்தானில் பாலைவனத்திலும் ராணுவ வீரர்களின் யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்தோ - திபேத் எல்லையில் மோப்ப நாய் பிரிவு சார்பில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

Tags :
|