Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ..மா.சுப்பிரமணியன் பேட்டி

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ..மா.சுப்பிரமணியன் பேட்டி

By: vaithegi Wed, 08 Nov 2023 3:48:29 PM

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ..மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: 95 மருத்துவமனைகள்.. 750 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது ... வருகிற நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை அன்று பெரும்பாலான மக்கள் குறிப்பாக குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழ்வர். இந்த பட்டாசு வெடிக்கும் போது எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அரசு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

ஏற்கனவே, பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சீன பட்டாசுகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தீபாவளி தினத்தன்று அரசு முன்னெடுத்து உள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கை

m. subramanian,diwali precautionary measures ,மா.சுப்பிரமணியன்,தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


இதையடுத்து அவர் கூறுகையில்,”தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தமிழகத்தில் ஏற்படும் தீ விபத்துகளை குறைக்க, சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீ விபத்து நடந்தாலும், அதனை உடனே தடுக்க மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மக்களை காப்பாற்ற, தமிழகம் முழுவதும், 95 மருத்துவமனைகளில், 750 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி தினத்தில் எந்தவித தீ விபத்து உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. இத்தீபாவளிக்கும் எந்தவித பெரிய தீ விபத்தும் ஏற்படக்கூடாது என மக்களை வலியுறுத்தி அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags :