Advertisement

IRCTC இணையதளத்தில் புதிய அம்சம் அறிமுகம்

By: vaithegi Sat, 02 July 2022 4:23:08 PM

IRCTC இணையதளத்தில் புதிய அம்சம் அறிமுகம்

இந்தியா: இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு ரயில்களின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளதால் திட்டமிடப்பட்ட தேதிகளில் தங்களது பயணங்களை தொடர விரும்பும் பலரும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்கின்றனர்.

இதனால் அவசரமாக பயணங்களை மேற்கொள்பவர்கள் டிக்கெட் கிடைக்காமல் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இச்சிரமங்களை தவிர்க்கும் விதமாகவும், டிக்கெட்டுகளை சரியான நேரங்களில் பெற்றுக்கொள்ளும் வகையிலும் IRCTC ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, IRCTC இணையதளத்தில் ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, எல்லா ரயில்களிலும் இருக்கைகள் இருப்பதை காணும் அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இருக்கை காலியாக இருக்கும் விவரங்களை தெரிந்து கொண்டு உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இல்லையெனில் காத்திருப்பு டிக்கெட்டை எடுக்க முடியும்.

irctc,online ticketing ,IRCTC ,ஆன்லைன் டிக்கெட்டு

இதற்கு முன் ரயிலில் எந்த இருக்கை காலியாக உள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் வசதி IRCTCல் இதுவரை கொடுக்கப்படவில்லை. இப்போது IRCTC புஷ் நோட்டிபிகேசன் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம், பயணிகள் இருக்கை வசதி உள்ளிட்ட பல வகையான வசதிகள் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக பயணிகள் IRCTC இணையதளத்தில் புஷ் நோட்டிபிகேசன் ஆப்ஷனை எனேபிள் செய்ய வேண்டும்.

இதன்மமூலம் ரயிலில் இருக்கும் காலியிட விவரங்கள் தோன்றும். அதை வைத்து பயணிகள் தங்கள் வசதிக்கேற்ப காலியாக உள்ள இருக்கையை முன்பதிவு செய்து கொள்ள முடியும். அதே போல ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள் யாரேனும் டிக்கெட்டை ரத்து செய்தால் இது குறித்த அறிவிப்பும் மொபைல் போனில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|