Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ட்விட்டரில் 10 ஆயிரம் எழுத்துக்கள் வரை ட்வீட செய்யும் புதிய அம்சம் அறிமுகம்

ட்விட்டரில் 10 ஆயிரம் எழுத்துக்கள் வரை ட்வீட செய்யும் புதிய அம்சம் அறிமுகம்

By: Nagaraj Fri, 14 Apr 2023 7:44:49 PM

ட்விட்டரில் 10 ஆயிரம் எழுத்துக்கள் வரை ட்வீட செய்யும் புதிய அம்சம் அறிமுகம்

நியூயார்க்: ட்விட்டரில் இது லேட்டஸ்ட்... ட்விட்டரில் 10,000 எழுத்துகள் வரை ட்வீட் செய்யக்கூடிய புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதிலிருந்து, பல புதிய அம்சங்களைப் பார்த்தோம். இந்நிலையில் புளூடிக் சேவை பயன்படுத்துவோருக்கு மேலும் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

கட்டணம் செலுத்தும் பயனர்கள் இப்போது 250 எழுத்துகள் என்ற வரம்பிலிருந்து 4000 எழுத்துகள் வரை ட்வீட் செய்யலாம். இந்த நிலையில், பணம் செலுத்தும் பயனர்கள் 10,000 எழுத்துகள் வரை ட்வீட் செய்யக்கூடிய புதிய வசதி இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

elon musk,twit,twitter, ,ட்வீட், புதிய அம்சம், புளூடிக், அறிமுகம், இணையதளம்

இந்த டிவிடியை 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்துவிட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் புளூடிக் சேவையை அதிக பயனர்கள் பயன்படுத்த இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ட்விட்டர் புளூடிக் பெறுவதற்கான கட்டணங்கள் மொபைல் ஃபோனுக்கு ரூ.900 மற்றும் இணையதளத்திற்கு ரூ.650 என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|