Advertisement

வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் அறிமுகம்

By: vaithegi Tue, 20 June 2023 4:23:59 PM

வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் அறிமுகம்


இந்தியா: இனி தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் தானாகவே சைலன்ஸ ஆகிவிடும் புதிய அம்சம் வாட்ஸ்அப்பில் அறிமுகம் ... உலகில் பல பில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஆப்களில் ஒன்றான வாட்ஸ்அப், தனது பயனர்களுக்கு பாதுகாப்பு அம்சத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அவ்வப்போது புது புது அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம். அதேபோன்று தற்போது மெட்டா நிறுவனம் தனது செயலியான வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை அறிமுகபடுத்தி உள்ளது.

இதையடுத்து இந்த அம்சத்தின் மூலம் இனி தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் கவலைப்படவேண்டாம். அந்த அழைப்பு தானாகவே அமைதியாகிவிடும். அதாவது நாம் சேமித்து வைத்திருக்கும் தொடர்பு எண்கள் தவிர வேறு யாராவது வாட்ஸ்அப்பில் அழைத்தால் அது நமக்கு தொந்தரவை ஏற்படுத்தாதவாறு அதை நாம் சைலன்ஸ் மோடில் வைத்துக்கொள்ளலாம்.

whatsapp,silence ,வாட்ஸ்அப்,சைலன்ஸ்

இந்தியாவில் பலர் தங்களது வாட்ஸ்அப் எண்ணுக்கு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பதாகவும், அது பெரும்பாலும் ஸ்பேம் அழைப்பாக இருப்பதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. எனவே இதன்மூலம் நிறைய பயனர்கள் பல லட்சக்கணக்கில் தங்களது பணத்தை இழந்தததாகவும், சிலர் இழக்க நேரிட்டதாகவும் வாட்ஸ்அப்புக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மெட்டா நிறுவனம் தற்போது இந்த அப்டேட்டை வெளியிட்டு உள்ளது.

தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் தானாகவே அமைதிப்படுத்த, நமது வாட்ஸ்அப்பில் பிரைவசி அமைப்புகளில் உள்ள அழைப்புகளில் நாம் சைலன்ஸ் அன்நோன் நம்பர்ஸ் என்பதை தேர்வு செய்யவேண்டும். இதை மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

Tags :