Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுமார் 10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யும் புதிய அம்சம் அறிமுகம்

சுமார் 10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யும் புதிய அம்சம் அறிமுகம்

By: vaithegi Fri, 14 Apr 2023 12:34:47 PM

சுமார் 10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யும் புதிய அம்சம் அறிமுகம்

சான் பிரான்சிஸ்கோ:மனதில் பட்ட கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சமூக வலைதளமாக விளங்குகிறது ட்விட்டர் தளம். இதனை அடுத்து பயனர்கள் வழக்கமாக இதில் 280 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். ‘ட்விட்டர் ப்ளூ’ சந்தா கட்டணம் செலுத்தி வரும் பயனர்கள் சுமார் 4,000 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும்.

இந்த நிலையில், 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யும் புதிய அம்சம் இப்போது அறிமுகமாகிவுள்ளது. மேலும், இந்த ட்வீட்டை பதிவு செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

feature,users,twitter ,அம்சம் ,பயனர்கள் ,ட்விட்டர்

கடந்தாண்டு எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்கி இருந்தார். அது முதலே புதுப்புது அப்டேட்களை அவர் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை அவர் கடைபிடித்து வருகிறார். இச்சூழலில் இந்த புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இப்போதைக்கு இது ‘ட்விட்டர் ப்ளூ’ பயனர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. இவர்கள் ப்ளூ டிக் பெற்ற பயனர்கள்.

ட்விட்டர் ப்ளூ சேவையை பெற பயனர்கள் சந்தா கட்டணம் செலுத்த வேண்டும். இந்தியா உட்பட உலகம் முழுவதும் இது பயன்பாட்டில் உள்ளது. வலைதள பயன்பாட்டுக்கு ரூ.650 மற்றும் மொபைல் போன் பயன்பாட்டுக்கு ரூ.900 என இதன் மாதாந்திர சந்தா உள்ளது. இதனை பயனர்கள் செலுத்துவதன் மூலம் விளம்பர இம்சைகள் இல்லாமல் ட்விட்டர் தளத்தை பயன்படுத்த முடியுமாம். மேலும், ட்விட்டரில் அறிமுகமாகும் புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்த முடியும் எனவும் தகவல்.

Tags :
|