Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவாமல் தடுக்க ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் புதிய வசதி அறிமுகம்

கொரோனா பரவாமல் தடுக்க ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் புதிய வசதி அறிமுகம்

By: Karunakaran Mon, 29 June 2020 2:29:18 PM

கொரோனா பரவாமல் தடுக்க ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் புதிய வசதி அறிமுகம்

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குளிரூட்டப்பட்ட அறைகளில் கொரோனா வேகமாக பரவும். இதனால் ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் கொரோனா பரவாமல் தடுக்க புதிய வசதியினை இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது, ரெயில்களின் ஏ.சி. எந்திரங்கள் மணிக்கு 6 முதல் 8 முறையே புதிய காற்றை உள்ளிழுக்கிறது. இதன் மூலம் 20 சதவீத அளவுக்கே புதிய காற்று பெட்டிக்குள் கிடைக்கும். மீதமுள்ள காற்று மறுசுழற்சி செய்யப்பட்டதாகவே இருந்து வருவதால், கொரோனா பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இனி மணிக்கு 16 முதல் 18 முறை புதிய காற்றை உள்ளிழுக்கும் எந்திரங்கள் பொருத்தப்படவுள்ளன.

coronavirus,train,ac compartment,corona spread ,கொரோனா வைரஸ், ரயில், ஏசி பெட்டி, கொரோனா பரவல்

கடந்த மாதம் 12-ந்தேதி முதல் ராஜ்தானி தடங்களில் 15 இணை ரெயில்களில் இந்த புதிய நடைமுறை பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இனி அனைத்து ரெயில்களுக்கும் இந்த புதிய நடைமுறை விரிவுபடுத்தப்படவுள்ளது. மறுசுழற்சி செய்யப்பட்ட காற்றை பயன்படுத்தும்போது அது விரைவில் குளிரூட்டப்படும்.

அடிக்கடி புதிய காற்றை குளிரூட்டுவதற்கு 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் எரிபொருள் தேவைப்படுவதால், இந்த புதிய நடைமுறை ஏற்படுத்தப்படும் போது, ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டணம் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

Tags :
|