Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாட்ஸ்அப்பில் அனுப்பிய முக்கிய செய்தியினை Pin செய்யும் வசதி அறிமுகம்

வாட்ஸ்அப்பில் அனுப்பிய முக்கிய செய்தியினை Pin செய்யும் வசதி அறிமுகம்

By: vaithegi Sat, 24 June 2023 1:39:57 PM

வாட்ஸ்அப்பில் அனுப்பிய முக்கிய செய்தியினை Pin செய்யும் வசதி அறிமுகம்

இந்தியா: whatsapp குரூப் மற்றும் சாட்டில் பயனாளர் அனுப்பிய முக்கிய செய்தியினை Pin செய்யும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியீடு ... whatsapp நிறுவனம் தொடர்ந்து பல பல அப்டேட்டுகளை பயனர்களின் வசதிக்கு தகுந்தார் போல வெளியிட்டபடி இருந்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் வீடியோ கால் மூலமாக ஸ்கிரீன் ஷேரிங் முறையையும் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. மேலும் இது மட்டுமில்லாமல் whatsapp செயலியின் மூலமாக பயனர்களுக்கு அனுப்பிய செய்தியினை 15 நிமிடம் வரைக்கும் எடிட் செய்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்திருக்கிறது.

whatsapp,pin ,வாட்ஸ்அப், Pin

இந்த நிலையில் தற்போது பயனர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள மெசேஜ் மற்றும் whatsapp குரூப்பில் அனுப்பப்பட்டு உள்ள முக்கிய செய்தியை பின் செய்து கொள்ளும்படியாக ஒரு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதையடுத்து இதற்கு முன்பு வரை முக்கிய பயனாளர்களின் மொத்த வாட்ஸ் அப் chatயும் பின் செய்து கொள்ளும் அம்சத்தை whatsapp நிறுவனம் வழங்கியிருந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட ஒரு செய்தியை மட்டும் பின் செய்து கொள்ளும் வசதியினை அப்டேட்டாக வெளியிட்டு இருக்கிறது.

மேலும் தற்போதைக்கு மெட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே இப்புதிய அப்டேட் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூடிய விரைவில் whatsapp பயனர்கள் அனைவருக்கும் இந்த அப்டேட் கிடைக்க இருப்பதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்திருக்கிறது..

Tags :