Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆவினில் செறிவூட்டப்பட்ட புதிய பசும்பால் இன்று அறிமுகம்

ஆவினில் செறிவூட்டப்பட்ட புதிய பசும்பால் இன்று அறிமுகம்

By: vaithegi Wed, 10 May 2023 2:46:25 PM

ஆவினில் செறிவூட்டப்பட்ட புதிய பசும்பால் இன்று அறிமுகம்

சென்னை: இன்று ஆவினில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் D செறிவூட்டப்பட்ட புதிய பால் பாக்கெட் அறிமுகம் .. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் வைட்டமின் A, வைட்டமின் D செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதற்க்கு முன்னதாக, செறிவூட்டப்பட்ட பசும்பாலை வாங்கி பயன்படுத்துவதால் உடலுக்கு தேவையான வைட்டமின் A மற்றும் டி கிடைக்கும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்திருந்தது.

cows milk,avin ,பசும்பால் ,ஆவின்

இந்த நிலையில் வைட்டமின் A, வைட்டமின் D செறிவூட்டப்பட்ட பசும்பால் புதிய ஊதா நிற பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய ஊதா நிற அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை ரூ.22 ஆக நிர்ணயிக்கப்பட்டு இன்று முதல் விற்பனைக்கு வந்து உள்ளது.

மேலும், வைட்டமின் A இந்த பால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுவதோடு, வைட்டமின் D சத்து உடம்பில் உள்ள எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்தை பெற்று தருவதில் பெரும் பங்களிக்கிறது. எனவே, பாலில் வைட்டமின் D செறிவூட்டுவது மிகுந்த பயனளிப்பதாக இருக்கும்.


Tags :