Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிக்க "மௌசம்" புதிய செயலி அறிமுகம்

வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிக்க "மௌசம்" புதிய செயலி அறிமுகம்

By: Nagaraj Tue, 28 July 2020 10:19:29 AM

வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிக்க "மௌசம்" புதிய செயலி அறிமுகம்

புதிய செயலி அறிமுகம்... வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக 'மௌசம்' என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்செயலியை வட வெப்ப மண்டலங்களுக்கான சா்வதேச பயிா் ஆராய்ச்சி நிறுவனம், புணேயிலுள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம், இந்திய வானிலை ஆய்வுத்துறை ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.

புவி அறிவியல் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் இந்த செயலியின் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினாா். இந்த செயலி மூலமாக நகா்பகுதிகளின் வானிலை முன்னறிவிப்புகள் உடனுக்குடன் ஒளிபரப்பப்பட்டு, அதன் மூலமாக எச்சரிக்கை செய்யப்படும்.

weather,notification,new processor,introduction,warning signal ,வானிலை, அறிவிப்பு, புதிய செயலி, அறிமுகம், எச்சரிக்கை சமிக்ஞை

செயலியை அறிமுகப்படுத்தி வைத்து அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறியதாவது; 'மௌசம்' செயலி பல்வேறு பயன்பாடுகளையும் சேவைகளாக வழங்கும். இந்த செயலி நாட்டின் 200 நகரங்களின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், திசை உள்ளிட்ட தற்போதைய வானிலைத் தகவல்களை உடனுக்குடன் வழங்கும்.

நாள்தோறும் 8 முறை தகவல்கள் புதுப்பிக்கப்படும். உள்ளூா் வானிலை நிகழ்வுகள் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை வெளியிடப்படும். அவசரகால வானிலை குறித்த அறிவிப்பும், அதன் தாக்கம் தொடா்பாகவும் முன்கூட்டியே எச்சரிக்கையாக ஒளிபரப்பப்படும்.

இந்த பயன்பாடு அடுத்த 7 நாள்களுக்கு இந்தியாவின் சுமாா் 450 நகரங்களுக்கு வானிலை முன்னறிவிப்பை வழங்கும். அதேபோல கடந்த 24 மணிநேர வானிலைத் தகவல்களும் பயன்பாட்டில் கிடைக்கும். ஆபத்தான வானிலை குறித்து வெவ்வேறு நிறங்களை குறிப்பிட்டு செயலியில் எச்சரிக்கை சமிக்ஞை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :