Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாட்ஸ் அப்பில் பார்வேர்ட் மெசேஜ்களில் எடிட் செய்யும் ஆப்ஷன் அறிமுகம்

வாட்ஸ் அப்பில் பார்வேர்ட் மெசேஜ்களில் எடிட் செய்யும் ஆப்ஷன் அறிமுகம்

By: Nagaraj Thu, 20 Apr 2023 3:35:50 PM

வாட்ஸ் அப்பில் பார்வேர்ட் மெசேஜ்களில் எடிட் செய்யும் ஆப்ஷன் அறிமுகம்

புதுடில்லி: வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்டாக பார்வேர்ட் மெசேஜ்களில் எடிட் செய்யும் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகளவில் பல கோடிக்கணக்கான பயனர்கள் உபயோகித்து கொண்டு வருகின்றனர். இன்றைக்கு வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாதவர்கள் எவரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து இந்த வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக டெலிகிராம் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் வந்து விட்டது. ஆனாலும் வாட்ஸ் அப்பை பிற செயலிகளால் வீழ்த்த முடியவில்லை. அந்த அளவிற்கு மக்களை வாட்ஸ்அப் கவர்ந்து கொண்டு வருகிறது.

update,whatsapp,,update,whats up,information,meta,android mobile , ,அப்டேட் ,வாட்ஸ் அப், தகவல், மெட்டா, ஆண்ட்ராய்டு மொபைல்

இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு உதவும் வகையில் தகவல் தொடர்பை எளிதாக்கும் விதமாக பல புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸாக வைக்கும் வசதி கொண்டு வரப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது பார்வேர்ட் மெசேஜ்களில் எடிட் செய்யும் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி வாட்ஸ் அப்பில் இமேஜ் மற்றும் வீடியோகளோடு சேர்த்து அனுப்பப்படும் கேப்ஷன்களை மறுமுறை ஷேர் செய்யும் போது அதனை தங்கள் வசதிக்கேற்ப எடிட் செய்து அனுப்பலாம்.
இந்த வசதி வசதி தற்போதைக்கு ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.விரைவில் மற்ற தளங்களுக்கு கொண்டு வரப்படும் என்று மெட்டா தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|
|