Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதி இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அனைவருக்கும் அக்சஸ் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் ... தேவஸ்தானம் அறிமுகம்

திருப்பதி இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அனைவருக்கும் அக்சஸ் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் ... தேவஸ்தானம் அறிமுகம்

By: vaithegi Sat, 18 June 2022 6:21:36 PM

திருப்பதி  இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அனைவருக்கும் அக்சஸ் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் ... தேவஸ்தானம் அறிமுகம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் வார இறுதி நாட்கள் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளுர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் திருப்பதியில் நேற்று மட்டுமே 76 ஆயிரத்து 407 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் மற்றும் 39 ஆயிரத்து 938 பக்தர்கள் முடிகாணிக்கை செய்துள்ளனர்

பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் சுவாமி தரிசனம் செய்ய 10 முதல் 20 மணி நேரம் வரைக்கும் கூட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாவதால் தேவஸ்தானத்திடம் வேறு ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை பக்தர்கள் விடுத்து வந்தனர்.

tirupati,access smart card,devotees ,திருப்பதி,அக்சஸ் ஸ்மார்ட் கார்டு ,பக்தர்கள்

இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தேவஸ்தானம் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு "ஆக்சிஸ் ஸ்மார்ட் கார்டு" வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அனைவருக்கும் அக்சஸ் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. இவர்களின் ஒவ்வொரு அக்சஸ் கார்டிலும் பக்தர்களின் தரிசனத்திற்கான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால், தரிசன நேரம் வரைக்கும் வரிசையிலேயே காத்திருக்காமல் வெளியே சென்றுவிட்டு தரிசனத்திற்கான நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வந்தால் போதும். குறிப்பிடப்பட்டிருக்கும் மணி நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு பின்பு வந்தால் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை அடைந்துள்ளது

Tags :