Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடற்கரையில் உயிர்காக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகம்

கடற்கரையில் உயிர்காக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகம்

By: Nagaraj Wed, 08 Feb 2023 11:54:19 AM

கடற்கரையில் உயிர்காக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகம்

பனாஜி: ரோபோக்கள் அறிமுகம்... கோவா கடற்கரையில் உயிர்காக்கும் மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவா கடற்கரைக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நீச்சல் தடைசெய்யப்பட்ட பகுதிகள் மற்றும் கடல் அலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் நீந்தும்போது சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பது போன்ற அவலங்கள் அதிகரித்து வருகின்றன.மேலும் அவசர காலங்களில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

artificial intelligence robots,goa beach,introduction ,, அறிமுகம், கோவா கடற்கரை, தானியங்கி ரோபோக்கள்

இவற்றை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் கோவா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தானியங்கி ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆராஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோ நீச்சல் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ரோந்து சென்று சுற்றுலா பயணிகளை எச்சரிக்கிறது. இதேபோல், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் டிரைடன் என்ற கண்காணிப்பு அமைப்பு கடற்கரைகளில் கூட்டத்தை நிர்வகிக்கவும் குற்றங்களை கண்காணிக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :