Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளை கண்காணிக்க கணினி மென்பொருள் அறிமுகம்

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளை கண்காணிக்க கணினி மென்பொருள் அறிமுகம்

By: Nagaraj Fri, 14 Aug 2020 11:01:37 AM

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளை கண்காணிக்க கணினி மென்பொருள் அறிமுகம்

சுற்றுலாப்பயணிகளை கண்காணிக்க கணினி மென்பொருள்... நாட்டின் விமான நிலையங்கள் திறக்கப்பட்ட பின்னர் உள்வரும் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிப்பதற்கு கணினி மென்பொருள் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், சுற்றுலாப் பயணிகள் வீசா பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் முதல் பார்வையிடும் இடங்கள் வரை இந்த மென்பொருள் மூலம் அவதானிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

tourists,computer software,testing,fees ,
சுற்றுலாப்பயணிகள், கணினி மென்பொருள், பரிசோதனை, கட்டணம்

இதேவேளை, சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் மற்றும் அதன் பின்னர் 5 அல்லது 7 நாட்களுக்குப் பின்னரும் இரண்டு தடவைகள் சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், குறித்த பிசிஆர் பரிசோதனைகளுக்காக சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கட்டணம் அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :