Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை விமான நிலையத்தில் புதிய வசதிகள் அறிமுகம்... விமான நிலைய நிர்வாகம் தகவல்

சென்னை விமான நிலையத்தில் புதிய வசதிகள் அறிமுகம்... விமான நிலைய நிர்வாகம் தகவல்

By: vaithegi Tue, 28 June 2022 2:42:12 PM

சென்னை விமான நிலையத்தில் புதிய வசதிகள் அறிமுகம்...  விமான நிலைய நிர்வாகம் தகவல்

சென்னை : தமிழகத்தின் சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 ரன்வேக்களை இயக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.ரன்வே 3.66 கி.மீ., 2வது ரன்வே 2.89 கி.மீ., இதில் முதல் ரன்வேயில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி புறப்படுகின்றன. 2வது ரன்வேயில் ஏடிஆர் எனும் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகிறது.

இங்கு ஒரு மணி நேரத்தில் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு மணி நேரத்தில் 50 விமானங்களை இயக்கும் நோக்கில் 2 ரன்வேக்களையும் மாற்றியமைக்க விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளில் நிர்வாகத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

chennai airport,flights , சென்னை விமான நிலையம்,விமானங்கள்

சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இயக்கத்தை துரிதப்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதன் பேரில் தான் 2 ரன்வே பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததும், வரும் ஜூலை மாதம் 2வது ரன்வே முழு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags :