Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் கூடிய விரைவில் யூபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகம்

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் கூடிய விரைவில் யூபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகம்

By: vaithegi Fri, 02 Sept 2022 5:29:41 PM

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் கூடிய விரைவில் யூபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான ரேஷன் பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் முறையிலும் அவ்வப்போது மாற்றங்கள் அறிவிக்கப்படுகின்றன.

அதாவது ரேஷன் கடைகளில் கீழே சிந்திய பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ரேஷன் கடைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், கீழே சிந்திய பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

upi,ration shop ,யூபிஐ ,ரேஷன் கடை

மேலும், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்திலும் வைஃபை வசதியை கூடிய விரைவில் கொண்டு வர அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது. மக்கள் ரேஷன் கடைகளை இணைய சேவை மையமாக கூட பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் கூடிய விரைவில் யூபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், சில குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர்களும் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :
|