Advertisement

செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் அறிமுகம்

By: Nagaraj Mon, 10 July 2023 11:05:01 PM

செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் அறிமுகம்

ஒடிசா: செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்... ஒடிசாவை சேர்ந்த தனியார் செய்தி சேனல் ஒன்று AI என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட மெய்நிகர் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.

பாரம்பரிய கைத்தறி சேலை உடுத்திய இளம்பெண் போல் தோற்றமளிக்கும் இந்த செயற்கை செய்தி வாசிப்பாளருக்கு லிசா என பெயரிடப்பட்டுள்ளது.

poisoners,fake news,experts,news,lisa ,விஷமிகள்,  போலி செய்திகள், நிபுணர்கள், செய்திகள், லிசா

செய்தியின் சாராம்சத்திற்கு ஏற்றவாறு முகபாவனைகளை மாற்றும் லிசா தற்போது ஆங்கிலத்திலும், ஒடியாவிலும் செய்திகளை வழங்கி வருகிறது. இத்தகைய AI செய்தி வாசிப்பாளர்களால் 24 மணி நேரமும் செய்திகளை வழங்க முடிவதுடன், நேரலையில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியும் என கூறப்படுகிறது.

அதே சமயம் வதந்திகளையும், போலி செய்திகளையும் பரப்ப விஷமிகள் இவற்றை பயன்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags :
|