Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐபோன் 15 சீரியஸ் ஃபோன்கள் தயாரிப்பு: ஆப்பிள் நிறுவனம் மும்முரம்

ஐபோன் 15 சீரியஸ் ஃபோன்கள் தயாரிப்பு: ஆப்பிள் நிறுவனம் மும்முரம்

By: Nagaraj Mon, 19 June 2023 7:30:02 PM

ஐபோன் 15 சீரியஸ் ஃபோன்கள் தயாரிப்பு: ஆப்பிள் நிறுவனம் மும்முரம்

நியூயார்க்: ஐபோன் 15 சீரியஸ் ஃபோன்கள் தயாரிப்பு... ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த புது வரவான ஆப்பிள் ஐபோன் 15 சீரியஸ் ஃபோன்களை தயாரிக்கத் தொடங்கி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

உலகெங்கிலும் ஐபோன் என்றாலே மக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அவர்கள் வெளியிடும் எல்லா ரக போன்களும் விற்பனையில் சக்கைப் போடு போடும். அதேபோல ஐபோன்களின் ஒவ்வொரு புதிய சீரியஸும் புதுப்புது அம்சங்களுடன் மக்களைக் கவரும் வகையில் வெளிவரும்.

இறுதியாக வெளிவந்த ஐபோன் 14 சீரியஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அவர்களின் அடுத்த தயாரிப்பான ஐபோன் 15 சீரியஸ் போன்கள் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர். இத்தகைய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் விதமாக ஐபோன் 15 தொடர்பான புதிய தகவல்கள் லீக் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக புதிய ஐபோன் 15 சீரிஸ் போன்கள், ஐபோன் 14 மாடல்களை விட அதிக விலை கொண்டதாக இருக்குமென்று நம்பப்படுகிறது. தற்போது ஆப்பிள் மற்றும் பாக்ஸ்கான் இணைந்து புதிய ஐபோன்களின் சோதனைத் தயாரிப்பை தொடங்கியுள்ளதாக Foxcon நிறுவனம் மூலம் விவரங்கள் வெளிவந்துள்ளது. இந்த ஆப்பிள் ஐபோன் 15 சீரியஸ் ஸ்மார்ட் ஃபோன்கள், அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிகப்படியான ஆர்டர்களைப் பெறும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் முதல் வாரத்திலேயே பல மில்லியங்களில் விற்பனை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பான அம்சம் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களை அதன் பயனர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தேவையை பூர்த்தி செய்ய, முதற்கட்ட சோதனைத் தயாரிப்பைத் தொடங்கியுள்ளனர்.

iphone 14 price,$200,fast charging,supported,model ,ஐபோன் 14 விலை, 200 டாலர்கள், பாஸ்ட் சார்ஜிங், ஆதரிக்கும், மாடல்

தொடக்கத்தில் இந்த முயற்சி மெதுவாக இருக்கும் என்றும், இந்த மாத இறுதிக்குள் முழுவீச்சில் உற்பத்தி முழுமையாகத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஐபோன் 15 சீரியஸ் போன்கள் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களைப் போலவே புதிய வடிவமைப்பில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இது தட்டையான விளிம்பு கொண்ட வடிவமைப்புடன் இருக்கும் என்றும், இதில் மற்ற ஐபோன் கேமராக்களை விட மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், ஆட்டோ போகஸுடன் இயங்கும் புதிய கேமரா ஆகியவையும் இதில் அடங்கும். இந்த ஐபோன் 15 ஃபோன்கள் முற்றிலும் புதுமையான A17 பயோனிக் சிப் மூலமாக இயக்கப்படும்.

உலகிலுள்ள அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களும் USB-C Port உடன் உருவாக்கப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறைக்கு இணங்க, இந்த ஐபோன் 15 சாதனமும் யூஎஸ்பி டைப் சி பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 15ன் விலை அதன் முந்தைய மாடலான ஐபோன் 14 விலையை விட, சுமார் 200 டாலர்கள் வரை அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Tags :
|