Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கட்டாயப்படுத்தி தனிமை முகாமில் வைக்கப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரி விடுவிப்பு

கட்டாயப்படுத்தி தனிமை முகாமில் வைக்கப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரி விடுவிப்பு

By: Nagaraj Sat, 08 Aug 2020 08:12:40 AM

கட்டாயப்படுத்தி தனிமை முகாமில் வைக்கப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரி விடுவிப்பு

தனிமை முகாமில் இருந்து விடுவித்தது... மும்பையில் கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தப்பட்ட பீஹார் ஐ.பி.எஸ்.அதிகாரி வினாய் திவாரியை மும்பை மாநகராட்சி விடுவித்தது.

நடிகர் சுஷாந்த்சிங் .34 மரண வழக்கில் அவரது தந்தை, சுஷாசாந்த் காதலி ரியா சக்கரவர்த்தி மீது பீஹார் போலீசில் புகார் கூறினார். இது தொடர்பாக ரியா சர்க்கரவர்த்தியை விசாரிக்க பீஹார் ஐ.பி.எஸ். அதிகாரி வினய் திவாரி தலைமையிலான போலீசார் மும்பை சென்றனர்.

bihar,officer,vinay tiwari,mumbai,loneliness camp ,பீஹார், அதிகாரி, வினாய் திவாரி, மும்பை, தனிமை முகாம்

அங்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள், கொரோனாவை காரணம் காட்டி, திவாரியை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைத்தனர்."தனிமைப்படுத்தப்பட்டுள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரியை விடுவிக்காவிட்டால், சட்ட நடவடிக்கை எடுப்போம்," என, மும்பை அதிகாரிகளுக்கு, பீஹார் டி.ஜி.பி., குப்தேஷ்வர் பாண்டே எச்சரிக்கை விடுத்தார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விஷயத்தில், உச்ச நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று வினாய் திவாரியை மும்பை மாநகாரட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் விடுவித்தனர். உடனடியாக இரவோடு இரவாக பீஹார் புறப்பட்டுச் சென்றார்.

Tags :
|
|